பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக் காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனம் (10:92) கூறுகின்றது.
ஃபிர்அவ்னின் உடல், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்பதால் தான் அவனது உடலைப் பாதுகாத்து வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர் களின் உடலைப் பாதுகாப்பதற்காக உரிய ரசாயனங்களைப் பயன்படுத்தி ஒரு பெட்டியில் உடலை வைத்து மூடுவார்கள். இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல் மம்மி' எனப்படுகிறது. பிறகு அதன் மேல் பிரமிட் எனும் கோபுரத்தை அமைப்பார்கள்.
1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு பள்ளத்தாக்கில் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற் காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து இது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கரையில் ஒதுங்கி, அன்றைய மக்கள் அதை எடுத்து மம்மி' யாக்கி மன்னர்களை அடக்கம் செய்யும் ஒரு பள்ளத்தாக்கில் புதைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின் ஃபிர்அவ் னின் உடல் கண்டெடுத்து மீட்கப்பட்டது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிரூபிக்கும் சான்றாகும்.
No comments:
Post a Comment