Thursday, 21 June 2012

கூட்டு துஆ கேட்பது சரியா? தவறா?



கூட்டு துஆ கேட்பது தவறு என்பதை திருக்குர்ஆனில் ஆராய்ந்து பார்ப்போம்.
உங்கள் இறைவனைப் பணிவுடனும்இரகசியமாகவும் பிரார்த்தணை  செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்  (திருக்குர்ஆன் 7:55)
உமது இறைவனைக் காலையிலும்மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும்அச்சத்துடனும்சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் (திருக்குர்ஆன் 7:205)
இறைவனை பிரார்த்தனை செய்வது எவ்வாறு என்பது பற்றி மேற்கூறிய (குர்ஆன் 7:55)  வசனம் முறையைக் கற்றுத் தருகிறது.
நாம் முதலாவதாக குறிப்பிட்ட  இந்த (7:55 திருக்குர்ஆன்) வசனத்தின் விளக்கம்.   பணிவுடன்தான் நாம் இறைவனிடம் பிரார்த்தணை செய்யவேண்டும்  என்பது முதலாவது ஒழுங்கு. அவர் அவர்  தேவைகளை தனியாக உள்ளச்சத்தோடு அல்லது வாயசய்த்து அதாவது (மிக அமைதியாக கதைப்பது) இதைத்தான் இரகசியம் என்பது இது இரண்டாவது ஒழுங்கு.
அவ்வாறு கேட்காமல் ஸ்பீக்கர் போட்டு சப்த்தமாக  பிரார்த்தணை  செய்தால்  பணிவு, இரகசியமும் அறவே இல்லாமல் போய் விடும். 
அல்லாஹ்விடம் கேட்பது எவ்வாறு என்பதை மேலே குறிப்பிட்ட இரண்டாவது (திருக்குர்ஆன் 7:205)  வசனம் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
 அவர் அவர்  தேவைகளை அவர் அவர்  தனியாக அதாவது  உள்ளச்சத்தோடு அல்லது நாவினால் கேட்பதுதான் சரியானது என்பதை நாம் மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்தை கவனத்தில் கொண்டால் கூட்டு துஆ கேட்பது தவறு என்பதை கூட்டு துஆ கேட்பவர்கள் உணர்வார்கள்.
----------------------------------------------------------------------------
THANKS TO 

No comments:

Post a Comment