Thursday, 21 June 2012

குர்ஆனில் உதாரணங்கள்(quran hinds)


தீய வழியில் செல்வது நஷ்டம் தரும் வியாபாரம் - 2:16
நயவஞ்சகர்களுக்கு உதாரணம் - 2:17-20
யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் - 2:74
நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் - 2:171
அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் - 2:187
தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை - 2:187
நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700 ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் - 2:261
பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை - 2:264
செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை - 2:264
இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் - 2:265
பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் - 2:266
இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்கள் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் - 3:117
சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் - 6:36, 6:122, 27:80, 30:52, 35:22
நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் - 5:16, 6:122, 13:16, 24:35, 35:20, 39:22, 57:9, 65:11
இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் - 6:39, 10:42, 10:43, 11:24, 13:16, 13:19, 21:45, 30:52, 43:40
நேர் வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழி கெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல் - 6:50, 35:19, 40:58, 41:17
மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும் மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் - 7:57
மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் - 7:176
சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் - 7:179, 25:44, 47:12
தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் - 9:109
அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவனுக்கு ஒப்பிடுதல் - 13:14
நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் - 14:18
ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் - 14:24,25
திடீரென்று அழிந்து போகும் செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் - 10:24, 18:45, 57:20
அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் - 13:17
பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் - 14:26
போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் - 16:75
சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் - 16:76
சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல் நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் - 16:92
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் - 22:31
இணை கற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் - 22:73
நிராகரிப்பவர்களின் செயல்களை காணல் நீருக்கு ஒப்பிடுதல் - 24:39
நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடல் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் - 24:40
இறைவனுக்கு இணை கற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் - 29:41
இணை கற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது - 30:28
நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் - 35:21
நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் - 35:29
பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் - 39:29
வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் - 43:11
நபித் தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் - 48:29
புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் - 49:12
நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல் - 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20
கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் - 62:5
வழி கெட்டவனை தலை குப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் - 67:22
ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் - 3:59

No comments:

Post a Comment