Wednesday, 27 June 2012

ஆடையணிவதின் ஒழுக்கங்கள் ......




يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) سورة الأعراف

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7: 26)

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنْ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمْ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ(81) سورة النحل

வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81)

அழகிய ஆடை :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்'' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 147)

அழுக்கான ஆடையணியத் தடை :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ''இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 3540)

வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது புறங்களிலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 3612)

புத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு '' அல்லாஹுýம்ம லகல் ஹம்து. அன்த கஸவ்தனீஹி, அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸுýனிஅ லஹுý. வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மாஸுýனிஅ லஹுý'' என்று கூறுவார்கள்.

பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 1689)



--------------
thanks to
Ashraf Ibnu Sulthan

பெண்களும் பள்ளிவாசலும்…..






பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்)அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.


இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால்இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 900, 873, 5238.

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 865, 899.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
நூல்: புகாரி 578, 372, 867, 872

.'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள்.
நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்சென்று 'பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்' என்று தெரிவித்தார்கள்.
நூல்: புகாரி 866, 569, 862, 864.

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பதுவழக்கம்.
நூல்: புகாரி 875, 837, 866

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும்நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.

மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.
-------------
thanks to 
mubijannath

Monday, 25 June 2012

இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்


இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்

ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான "இஞ்சீல்" எனப்படும் "பைபிள்" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக

1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.

2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.

இவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

x] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.
x] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
x] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
x] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

இன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

ஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!

x] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.

அடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.

x] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.

அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.

x] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).
x] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.

அன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா? என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

இவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.

சில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.

சில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.

இப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.

இப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.

கெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.

அறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

ஆதாரப்பூர்வமானவை
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.

உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.

1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ

2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ

1) -> அபூ அவானா -> குதைபா ->
2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->
ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.

1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்கலாம்.

இல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது சிலர் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.

நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.

திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.

இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும்.

இந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும்.





----------------------------------------------------


THANKS TO
Siraj Peer Ali

Friday, 22 June 2012

ஷஃபானில் நோன்பு?


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஷஃபானில் நோன்பு:

நபி(ஸல்அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்தமாதத்திலும் நோன்பு நோற்றதில்லைஷஅபானில் (சில ஆண்டுகளில்)முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்குநீங்கள்அமல்கள் (வணக்கங்களைச்செய்யுங்கள்நீங்கள்சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!" என்றும்கூறுவார்கள்குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும்தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள்தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்
அறிவிப்பாளர் :ஆயிஷா(ரலி)நூல் : புஹாரி(1970)

ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ஓராண்டில் ஷஅபான்மாதத்ைதவிட அதிகமாக
ேவெறந்த மாதத்திலும் ேநான்பு ேநாற்றதில்ைல. "நற்ெசயல்களில் உங்களால்
இயன்றைதேய ெசய்யுங்கள்நீங்கள் சலிப்பைடயாதவைர அல்லாஹ்சலிப்பைடய
மாட்டான்'' என்று அவர்கள் கூறுவார்கள்ேமலும், "குைறவாகஇருந்தாலும் ெதாடர்ந்து
ஒருவர் ெசய்துவரும் நற்ெசயேல அல்லாஹ்விற்கு மிகவிருப்பமானதாகும்'' என்றும்
அவர்கள் கூறுவார்கள்
நூல் : முஸ்லிம்(2132)
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) 

ஷஃபான் நோன்பில் முரண்பட்டு பேசுவது ஏன் ?

Click this link:
OR

மேலும் விபரம் அறிய
http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/-15-/ 
---
Thanks and Regards
  Shagar.M

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! -அல்-குர்ஆன் (3 :102) 

நாய் வளர்க்கலாமா?







அஸ்ஸலாமு அலைக்கும்.....

நாய் வளர்க்கலாமா?

பதில்:

வேட்டையாடுவது பாதுகாப்புத் தேவை ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டும் நாய்கள் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களைவளர்க்கக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் ெளிவுபடுத்துகின்றன
Inline image 1

2322حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ قَالَ ابْنُ سِيرِينَ وَأَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் நாய் வைத்திருக்கின்றாரோ வரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத்அளவிற்கு (நன்மைகள்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ(திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் ாய்களைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2322)

2323حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ رَجُلًا مِنْ أَزْدِ شَنُوءَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ اقْتَنَى كَلْبًا لَا يُغْنِي عَنْهُ زَرْعًا وَلَا ضَرْعًا نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ رواه البخاري
சாயிப் பின் யஸீத் (ரலி அவர்கள் கூறுகிறார்கள் :
"அஸ்த் ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீ ஸுஹைர் (ரலி) அவர்கள் என்னிடம், " "விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் தேவை எதுவும் இன்றி எவர் நாய்வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் ளவிற்கு(ஊதியம்) குறைந்து விடும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
நூல் : புகாரி (2323)

3225حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின்கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
இதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3225)

3928حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட)நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் ந்தும் ஜிப்ரீல் வரவில்லை.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள்தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு ாறு செய்ய மாட்டான். அவனுடையதூதர்களும் வாக்குறுதிக்கு மாறு ெய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப்பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள். உடனே"ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின்மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்."நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள்வரவில்லையே (ஏன்)?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழைய மாட்டோம்''என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (4272)

பாதுகாப்பிற்காக நாய்களை வளர்க்கலாம் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறுவளர்க்கும் போது அந்த நாய்களைத் தொட ேண்டிய நிலை அவசியம் ஏற்பட்டால் தொடுவதுதவறல்ல.
நாயின் எச்சில் கடுமையான அசுத்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவேஅதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

174 وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ كَانَتْ الْكِلَابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ رواه البخاري
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும்போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிக்குள் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாகஇருக்கவில்லை.
நூல் : புகாரி (174)

422و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ سَمِعَ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ عَنْ ابْنِ الْمُغَفَّلِ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ ثُمَّ قَالَ مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ ثُمَّ رَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ وَقَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ رواه مسلم       
அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காகவைத்திருக்கும் நாய்களுக்கு மட்டும் னுமதியளித்தார்கள். மேலும் "பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக்கழுவுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (473)

நாய்கள் மூலம் வேட்டையாடும் போது அது தன்வாயால் கவ்வி பிராணிகளைப் பிடித்து வந்தால்அந்தப்பிராணியை நாம் உண்ணலாம் என்று அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான். இதுவும்வேட்டைக்காக நாய் வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது.

 "தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் ேட்கின்றனர். "தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ்உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (ேட்டையாடியவை)களும்உங்களுக்கு னுமதிக்கப்பட்டுள்ளன'' எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டுவந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்!அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன் 5:4

மேலும் பார்க்க


---
Thanks and Regards
  Shagar.M

நம்பிக்கை கொண்டோரேஅல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! -அல்-குர்ஆன் (3 :102) 

-----------------------------------------------------------------------------------------------

THANKS TO

MUBI.JANNATH