Thursday 21 June 2012

அந்நாள் கடுமையானது(quran hinds)


அனைவரும் இறைவனின் முன்னே நிறுத்தப்படும் நாள் - 2:148, 2:281, 3:9, 3:25, 3:157, 4:87
தலைவர்கள் தொண்டர்களைக் கைவிடும் நாள் - 2:166,167, 10:28, 14:21, 29:25, 34:31,32
தனது செயல்களின் விளைவைக் காணும் நாள் - 3:25, 3:30, 3:115, 3:161, 4:40, 40:17
ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்ளும் நாள் - 18:99
மரண சாசனம் செய்யக் கூட அவகாசம் இருக்காது - 36:50
பிள்ளைகளும், செல்வமும் உதவ முடியாத நாள் - 3:116
வானமும், பூமியும் மாற்றப்படும் நாள் - 14:48
கைசேதப்படும் நாள் - 19:39
பாலூட்டுபவள் தனது குழந்தையை மறக்கும் நாள் - 22:2
மனிதன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நாள் - 24:24
எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள். - 2:48,123, 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36
சில முகங்கள் வெண்மையாகும் நாள். வேறு சில முகங்கள் கறுப்பாகும் நாள். - 3:106, 10:26, 39:60, 75:22, 80:38, 88:8
உண்மை பயனளிக்கும் நாள். -5:119
எதையும் மறைக்க முடியாத நாள். -4:42, 86:9
இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள். - 11:105, 78:38
பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள். - 14:42, 24:37, 75:7
பாலூட்டும் தாயை மறக்கடிக்கும் நாள் - 22:2
கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்யும் நாள். - 22:2
போதையுடையோராக மாற்றி விடும் நாள். - 22:2
இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள். - 40:18
சிறுவர்களின் தலை முடி கூட நரைக்கும் நாள்.. - 73:17
மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள். - 78:38
உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள் - 6:94, 16:111, 19:80, 19:95, 23:101, 28:66, 31:33, 35:18, 60:3, 75:10, 80:34, 82:19
மனிதர்கள் ஈசல்கள் போல் வீசப்படும் நாள் - 101:4
தீயோர் நீல நிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படும் நாள் - 20:102
மிருகங்களும் எழுப்பப்படும் நாள் - 6:38, 81:5
ஜின்களும் எழுப்பப்படும் நாள் - 6:128-130
ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள் - 19:68
காலோடு கால் பிண்ணிக் கொள்ளும் நாள் - 75:29,30

No comments:

Post a Comment