Monday, 23 July 2012

ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.
உதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.
சிந்தித்துப்பாருங்கள் உலகத்தில் இன்று சுமார் 600 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் தோஷம், பீடை என்று இருந்திருந்தால் யாருக்கேனும் திருமணம் நடைபெறுமா? இந்த அவல நம்பிக்கை முழுக்க முழுக்க தமிழ் பேசக்கூடிய நம் தமிழர்களின் மத்தியில்தான் உள்ளது மாறாக அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என்று யாருக்கும் இந்த தோஷம் பயம் ஏற்படுவதில்லை காரணம் உலகில் உள்ள 600 கோடி மக்களில் ஜோதிடத்தை நம்புபவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புவதில்லை அதை அனுமதிப்பதும் கிடையாது. குறி சொல்லும் ஜோதிடன் உங்களிடம் அற்ப காசுகளுக்காகத்தான் குறி கூறுகிறானே தவிர அவனுக்கு கோடி ரூபாய் பணம் இருந்தால் குறி சொல்வதை கேவலமாக எண்ணி பார்க், பீச் என்று ஜாலியாக அலைந்து திரிவான். எனவே இந்த ஜோதிடமும், ஜோதிடனும், ஜாதகமும் பொய் என்பதை உணருங்கள். இதோ சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
ஜோதிடம் பொய்யானது!
ஜோதிடம் என்பதற்கு வான மண்டலத்திலுள்ள (GALAXY) நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்பது பொருளாம்! எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய். எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா? பேசுகிறதா? இது முட்டாள்தனம் இல்லையா? எடுத்த எடுப்பிலேயே ஜோதிடம் என்ற பெயர் பெய்யாக இருக்கிறது சரி பார்ப்போம் இதில் என்ன உள்ளது என்பதை!
ஜோதிடன் என்பவன் பொய்யன்!
நட்சத்திரங்களின் மொழியை அறிந்தவன் ஜோதிடனாம் இது கொஞ்சம் ஓவரா இல்லையா? ஒரு தமிழ் பேசக்கூடியவனிடம் சென்று எதுகை, மோனை பற்றி கேட்டால் திக்குமுக்காடுகிறான் தமிழே தடுமாற்றமாக உள்ள நிலையில் ஜோதிடனுக்கு நட்சத்திர மொழி தெரியுமாம். வடமாநில மொழியான ஹிந்தி படிக்க தமிழனுக்கு தெரியல வானமண்டல மொழி தெரியுதாம்!
நட்சத்திரம் குறி கூறுகிறதாம்!
நட்சத்திரம் நேரத்தை கூறுகிறதாம் அது வானமண்டலத்தில் உள்ள 9 கோள்களின் மூலமாக விதியை ஆராய்ச்சி செய்து இது இப்படி! அது அப்படி என்று கூறுகிறதாம். எந்த நட்சத்திரமாவது பேசுமா அப்படி பேசுவதாக இருந்தால் இதோ நாம் டேப்ரிக்கார்டர் தருகிறோம் அதன் பேச்சை பதிவு செய்து தாங்க நாமும் கேட்டு ரசிக்கிறோம்!
கோள்களின் பெயரால் மோசடி
வான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகுகேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம் இந்த கோள்கள்தான் நேரத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேதுஎன்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம். (ராகு, கேது ஆகிய இரு கோள்கள் நிழல் உலக தாதாத்கள் போன்று நிழல் கோள்களாம் இவைகள்தான் கெட்ட நேரத்துக்கு காரணமாம்)
இந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம். சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா? இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா? தலையே கிர்ர்ர்ருன்னு சுற்றுகிறது!
எல்லா கோள்களும் ஒரே வேகத்தில் வருவதில்யாம் ஒவ்வொரு கோளும் வேகத்தில் மாறுவிடுகின்றனவாம்.
சரி! கோள்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது.
பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி(Venus), செவ்வாய் (Mars) ,வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) முதலான கோள்கள் சூரியன் (Sun), சுற்றி வருகிறது.
ஜோதிடர்கள் கூறும் கோள்களின் வேக கணிப்பு பொய்
கோள்கள் பெயர்
ஜோதிடர்களின் கோள் கணிப்பு
நாசா விஞ்ஞானிகளின்
கோள் கணிப்பு
சூரியன்12 மாதம்சுழலும் காலம் 30 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 273 m/s/s
வெளியேறும் வேகம் 620 km/sec.
சந்திரன்30 நாள்சுழலும் காலம் 27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 1.6 m/s/s
வெளியேறும் வேகம் 2.38 km/sec
செவ்வாய்1½ ஆண்டுகள்சுழலும் காலம் 24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம் 3.7 m/s/s
வெளியேறும் வேகம் 5.01 km/sec.
ராகு & கேது18 ஆண்டுகள்,இப்படி 2 கோள்கள் இல்லை
சனி30 ஆண்டுகளசுழலும் காலம் 10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம் 9.1 m/s/s
வெளியேறும் வேகம் 35.60 km/sec.

ஜோதிடர்களின் இந்த கோள்களின் வேக கணிப்பை விஞ்ஞானிகளின் வேக கணிப்புடன் இணைத்துப்பார்த்தால் நமக்கு தலை சுற்றல்தான் வருகிறது. இந்த அளவுக்குமா ஜோதிடர்கள் புரளியை கிழப்புவார்கள்.
சனி கிரகத்தை கிண்டல் செய்யும் ஜோதிடர்கள்!
ஒன்பது கிரகங்களில (அதாவது 2 பொய் கிரகங்களும் சேர்த்து) சந்திரன் என்ற கிரகம்தாம் வேகமாக சுற்றுகிறதாம். சனி கிரகம் மெதுவாக சுற்றுகிறதாம். எனவே சனி கிரகத்தை மந்தன் என்று கூறுகிறார்கள்.
சனி கிரகம் பற்றிய நொண்டி கதையை கேளுங்கள்
சனி என்பவர் ஒரு கிரகமாம் அவருக்கு ஒருகால் நொண்டியாம். ஆகவேதான் இந்த சனி கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் நொண்டி நொண்டி மெதுவாக சுற்றிவருவாராம். அந்த நொண்டி கதையை படித்துப்பார்ப்போமா!
இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினானாம் அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றாம் ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டானாம்.
ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்குமாம் அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாதாம். இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டானாம். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனராம்
ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினராம் அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டாராம்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டாராம். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகுமாம். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டாராம், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தனவாம்.

இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தானாம், சனி 12ம் இடத்தில் காணப்பட்டாராம்
தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டானாம் உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டானாம் இது தான் சனிபகவான் நொண்டியான கதையாம். ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறாராம்.
நொண்டி கதையை சிந்தித்துப்பாருங்கள்
நாம் இந்த ஜோதிடப் பிரியர்களிடம் கேட்பது என்னவென்றால் இந்த சனி பகவானுக்கு ஜாதகம் கணிக்க யாரும் இல்லையா? தன் கால் நொண்டியாகும் என்ற செய்தியை சனி பகவானால் முன்கூட்டியே கணித்து அறியவோ அதற்கான பரிகாரம் செய்யவோ இயலவில்லை அப்படியிருக்க இந்த சனி பகவான் எப்படி மற்றவர்களுக்கு குறி சொல்ல பயன்படுவார்.
இந்த நொண்டிக்கதைகளை வைத்துக்கொண்டு மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஜோதிட வித்துவான்கள்அதாவது காசுக்காக தங்களடைய கடவுளையை நொண்டியாக்கி அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். தாங்கள் வணங்கும் கடவுளை நொண்டியாக்கும் இந்த அவலநிலை இந்த தமிழர்களுக்கு தேவையா?
ஜாதகத்தை கணிக்கும் முறையில் தவறுகள்
  1. கிருதயுகம்.
  2. திரேதாயுகம்
  3. துவாபரயுகம்
  4. கலியுகம்.
வாண்மண்டலம் இந்த நான்கு யுகங்களையும் கொண்டதாம் இதற்கு ஒரு சதுர்யுகம் என்று பெயராம். இந்த சதுர்யுகத்தில் முதல் 3-யுகங்கள் முடிந்துவிட்டதாம் இப்போது நடை முறையில் இருக்கும் யுகம் கலியுகமாம்.
  • ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகளாம்
  • கலியுகத்தில் 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டனவாம்
ஆனால் விஞ்ஞானிகளின் துள்ளியமான கணிப்பு படி இந்த வாண் மண்டலம் காஸ்மோலாஜிகள் டைம் (cosmological time) பிரகாரம் 13.73 பில்லியன் வருடங்கள் முடிந்துவிட்டதாம்.
ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள் இப்போது 13.73 பில்லியன் என்பதை இந்திய முறைப்படி கணித்தால்13,73,00,00,000க்கு மேல் செல்கிறது. அதாவது
விஞ்ஞான கணிப்பு
13,73,00,00,000
ஜோதிடர்களின் கணிப்பு
43,20,000
வித்தியாசம்
13,72,56,80,000
ஜோதிடர்களால் ஒழுங்காக பிரபஞ்சத்தின் வயதை கூட அறிய முடியவில்லை கணித பாடத்தையே தப்பாக போட்டு வைத்துள்ளார்கள் அப்படியிருக்க ஜாதகம் எப்படி துள்ளியமாக அமையும். (பிரபஞ்சத்தின் வயதை அல்லாஹ் மட்டுமே துள்ளியமாக அறிவான் காரணம் அவன் பிரபஞ்சத்தை முன்மாதிரியின்றி படைத்தவன்)
சிந்திக்க சில அருள்மறை குர்ஆன் வசனங்கள்
துன்பம் ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் அதிகாரம்
எத்துன்பமும் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டே தவிர உண்டாகுவதில்லை.(அல் குர்ஆன் 64:11)
அல்லாஹ்விடம் துன்பம் பற்றிய பதிவேடு உள்ளது
எத்துன்பத்தையும் (உலகில்) நாம் உண்டாக்குவதற்கு முன்னதாகவே (லவ்ஹ{ல் மஹ்பூல் என்னும் ) பதிவேட்டீல் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் எத்துன்பமும் ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு (மிக) இலேசானதாகும்.(அல் குர்ஆன் 57~22)
அல்லாஹ்வைத் தவிர யாரக்கும் மறைஞானம் கிடையாது
மறைவானவற்றின் திறவுகோள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)
மறைவான ஞானம் இறைத்தூதர்களுக்கும் கிடையாது
(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத்தவிர (வேறொன்றும் எங்களுக்கு உறுதியாக ஏற்படாது. அவன் (தான்) எங்களின் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் முழுநம்பிக்கை வைக்கவும்.(அல் குர்ஆன் 9:51)
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

-சிராஜ் அப்துல்லாஹ்

No comments:

Post a Comment