Friday, 20 July 2012

நற்பண்புகள் (தொடர் 1)


(பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு) நன்மை செய்வதும் உறவைப் பேணி வாழ்வதும்.
அல்லாஹ் கூறுகிறான்:
தன்  தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். (29:8)
5970 வலீத் பின் அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர் கüன் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள், "(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கüடம் "கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவது'' என்றார்கள். "பிறகு எது?''
என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை செய்வது'' என்றார்கள். (நான் தொடர்ந்து) "பிறகு எது?'' என்றேன். அவர்கள், "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவது'' என்று பதிலüத்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித் தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்கüடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலüத்திருப்பார்கள்.2
அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?
5971 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.
இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரியவேண்டும்.
5972 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம், "நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு'' என்றார்கள்.3


எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.
5973 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 "ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொரு வரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)''  என்றார்கள்.4

பெற்றோருக்கு நன்மை செய்தவரின் பிரார்த்தனை (துஆ) ஏற்கப்படுவது.
5974 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கüல்) மூன்று பேர் நடந்து சென்றுகொண்டி ருந்தபோது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் (ஒதுங்குவதற் காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெüயேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், "நாம் (வேறெவருடைய திருப்திக் காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல் களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன்  இ(ப் பாறை)தனை (நம்மைவிட்டு) அகற்றிவிடக்கூடும்'' என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்கüல் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன்.  மாலையில் அவர்கüடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்துகொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தை யருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகு தூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக்  கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதை யும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பசியால்) கதறிக்கொண்டி ருந்தனர்.            இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப்  பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் (பின்வருமாறு) வேண்டி னார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவüடம் அவளைக் கேட்டேன். நான் அவüடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறத்துவிட்டாள். நான் முயற்சிசெய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள் "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய (சட்ட பூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித்  திறக்காதே'' என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!
அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு (இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான்.
மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டி னார்:
இறைவா! நான் ஒரு "ஃபரக்' அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவுடன், "என்னுடைய உரிமையை(கூலியை)க் கொடு'' என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரது உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்(டுச் சென்று விட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர் களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார்.
அதற்கு நான், "அந்த மாடுகüடத்திலும் அவற்றின் இடையர்கüடத்திலும்  நீ செல்! (அவை உனக்கே உரியவை)'' என்று சொன் னேன். அதற்கு அம்மனிதர், "அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!'' என்று சொன்னார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்'' என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்த படி நடந்தார். (இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!
அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றி விட்டான்.5
பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்கüல் ஒன்றாகும்.
இது குறித்து இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கüடமிருந்து அறிவித்துள்ளார்கள்.6
5975 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7
5976  அபூபக்ரா நுஃபைஉ  பின்  ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெரும்பாவங்கüலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்'' என்று சொல்லிவிட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)'' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் "அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?'' என்றேன்.8
5977 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட் டார்கள்' அல்லது "அவர்கüடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)'' என்று கூறிவிட்டு,  "பெரும்பாவங்கüலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். " "பொய் பேசுவது' அல்லது "பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்)'' என்று சொன்னார்கள்.9
(அறிவிப்பாளர்கüல் ஒருவரான) ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
"பொய் சாட்சியம்' என்றுதான் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன்.
 (இறைவனுக்கு) இணைவைக்கும் பெற்றோராயினும் அவர்கüன் உறவையும் பேணி வாழ்வது.10
5978 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்கüடம் "(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று கூறினார்கள்.11
"ஆகவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, "மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடா மலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர் களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. திண்ணமாக அலலாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்' எனும் (60:8ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்'' என (இதன் அறிவிப்பாளர் களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
கணவன் உள்ள ஒரு பெண் தன் தாயுடன் உறவைப் பேணி வாழ்வது.
5979 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவுகொண்டாடலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்'' என்று சொன்னார்கள்.
5980 அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பைஸாந்திய மன்னர்) ஹெராக்üயஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்கüடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்üயஸ், "அவர் ளநபி (ஸல்) அவர்கள்ன உங்களுக்கு என்னதான் போதிக்கின்றார்?'' என்று கேட்டார். நான், "தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளை யிடுகின்றார்'' என்று பதிலüத்தேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12
 (இறைவனுக்கு) இணைவைக்கும் சகோதர னுடனும் உறவைப் பேணி வாழ்வது.
5981அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப் படுவதைக் கண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக் கிழமை யிலும்,•தூதுக் குழுக்கள் தங்கüடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும்  இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்'' என்று சொன்னார்கள். பிறகு அதே பட்டு அங்கிகüல் சில நபி (ஸல்) அவர்கüடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள், "நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர் களே?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோ, மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற் காகவே வழங்கினேன்'' என்று சொன்னார்கள்.
எனவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13
உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு
5982 அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்'' என்று வினவப்பட்டது.13

5983 அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியாதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத் தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்'' என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், "இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்'' என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தை யும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்'' என்று கூறிவிட்டு, "உமது  வாகனத்தை (உமது வீடு நோக்கி) செலுத்து வீராக'' என்று சொன்னார்கள்.
அம்மனிதர் (அப்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்.14
உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை
5984 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15


உறவைப் பேணி வாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கித் தரப்படும்.
5985 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக் கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அüக்குமோ அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.16
 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


5986 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக் கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப் படுவதையும் யார் விரும்புகின்றாரோ அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவுபாராட்டுகிறான்.
5987 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) "உறவுகளைத் துண்டிப்பதி
லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்'' என்று கூறி(மன்றாடி)யது.
அல்லாஹ், "ஆம். உன்னை(உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியüக்கவில்லையா?'' என்று கேட்டான். அதற்கு உறவு, "ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ், "இது உனக்காக நடக்கும்'' என்று சொன்னான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் "(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு  பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.17
5988 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 ஆகவே, இறைவன் (உறவை நோக்கி) "உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக்கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்'' என்று கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5989 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு (இறையருüன்) ஒரு கிளையாகும். ஆகவே, "அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்த போது இறைவன் சொன்னான்).
இதை நபி (ஸல்) அவர்கüன் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உறவைப் பசுமையாக்க வேண்டும்.
5990 அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தாம்'' என நபி (ஸல்) அவர்கள் ஒüவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள்.
"முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கüன் (மூல நூல்) பிரதியொன்றில் "இன்னார்' எனும் (சொல் உள்ள) இடம் (நிரப்பப்படாமல்) வெற்றிடமாக உள்ளது'' என அறிவிப்பாளர் அம்ர் பின் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கüன் வழியாக வரும் அன்பஸா பின் அப்தில் வாஹித் (ரஹ்) அவர்கüன் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள், "ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்கு வேன்'' என்று கூறியதாக அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, "அவர்கüன் உறவைப் பேணி நடந்துகொள்வேன்'' என்றார்கள்.

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகின்றவர் அல்லர்.
5991 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.19
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்கüல் சிலர் இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கüன் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி (ஸல்) அவர்கüன் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.
 (இறைவனுக்கு) இணைவைப்பவராக இருந்தபோது உறவைப் பேணிய ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் (அதற்கான நன்மை இப்போது கிடைக்குமா)?
5992 ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!'' என்று  கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்'' என்று பதிலüத்தார்கள்.20
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.



பிறருடைய பெண் குழந்தைத் தம்முடன் விளையாட ஒருவர் அனுமதிப்பதும், அவளை முத்தமிடுவதும், அவளுடன் நகைச்சுவையாகப் பேசுவதும்.
5993 உம்மு காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இது) நன்றாயிருக்கிறதே! (இது) நன்றாயிருக்கிறதே!'' என்று (என் சட்டை குறித்துச்) சொன் னார்கள். நான் ளநபி (ஸல்) அவர்கüன் இரு புஜங்களுக்கிடையே இருந்தன நபித்துவ முத்திரையில் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. பிறகும் (அதைக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதை (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு'' என்று (எனது நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தித்துக்) கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள், "(அந்தச் சட்டை நிறம் மாறி பழுப்பேறி மக்கள்) பேசும் அளவிற்கு உம்மு காலித்
(ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்'' என்று கூறுகின்றார்கள்.21
 (ஒருவர் தம்) குழந்தைகள் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக்கொள்வதும்.
நபி (ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கüடமிருந்து  ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.22
5994 அப்துர் ரஹ்மான் பின் அபீநுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்கüடம், "(இஹ்ராம் கட்டியவர்) கொசுக்களைக் கொன்றுவிட்டால் பரிகாரம் என்ன?'' என்று கேட்டார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்,
"நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார்கள். அவர், "நான் இராக்வாசி'' என்று பதிலüத்தார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம்மருகில் இருந்தவர்கüடம்), "இவரைப் பாருங்கள். கொசுக்களைக் கொன்றால் பரிகாரம் என்ன? என்று இவர் என்னிடம் கேட்கிறார். ஆனால், (இராக்வாசிகளான) இவர்களோ நபி (ஸல்) அவர்களுடைய ளபுதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களுடையன புதல்வரைக் கொன்று விட்டார்கள். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், "(ஹசன் ஹுசைன் ஆகிய) அவர்கள் இருவரும் உலகின் இரு துளசி மலர்கள் ஆவர்'' என்று (பாராட்டிக்) கூறக் கேட்டேன்'' என்று சொன்னார்கள்.23
5995 நபி (ஸல்) அவர்கüன் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை தவிர வேறெதுவும் அவருக்கு என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கüடம் இது பற்றி நான் சென்னேன். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், "யார் இந்தப் பெண் குழந்தை கüல் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்றார்கள்.
5996 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது தோüன் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய வண்ணம் எங்கüடையே வந்து அப்படியே (எங்களுக்கு இமாமாக  நின்று) தொழுவித்தார்கள். அவர்கள் ருகூஉ செய்யும் போது உமாமாவைக் கீழிறக்கிவிட்டார்கள். (சஜ்தாலிருந்து நிலைக்கு) உயரும்போது அவரை மீண்டும் (தோüல்) ஏற்றிக் கொண்டார்கள்.24
5997 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ
பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், "எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின் றார்கள். அவர்கüல் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள்.

5998 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி  நபி (ஸல்) அவர்கüடம் வந்து, "நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்  உமக்காக நான் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள்.

5999 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அவர்கüடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற் காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகüல் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலா னாள். அப்போது எங்கüடம் நபி (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், "இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ்
தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப்  பங்கிட்டான்.
6000 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக் கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


உணவüக்க வேண்டுமே என அஞ்சி ஒருவர் தம் குழந்தையையே கொலை செய்வது (கொடிய பாவமாகும்).
6001 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! பாவங் கüலேயே மிகப் பெரியது எது?'' என்று கேட்டேன். "உன்னைப் படைத்த இறைவ னுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்'' என்று பதிலளித்தார்கள். "பிறகு எது?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது'' என்று சொன்னார்கள். நான், "பிறகு எது?'' என்றேன். "உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவி யுடன் நீ விபசாரம் புரிவது'' என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், "அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்க மாட்டார்கள்'' என்று தொடங்கும் (25:68 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருüனான்.25
சிறு குழந்தையை மடியில் வைத்தல்
6002 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழந்தையைத் தமது மடியில் வைத்து இனிப்புப் பொருளை மென்று அதன் வாயிலிட்டுக்கொண்டிருந் தார்கள். அப்போது அவர்கள் மீது அந்தக் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. ஆகவே, அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதன் மீது ஊற்றச்செய்தார்கள்.26
தொடையின் மீது சிறு குழந்தையை வைத்துக்கொள்வது.
6003 ளநபி (ஸல்) அவர்கüன் வளர்ப்புப் பேரரானன உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, "இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.27
(இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) சுலைமான பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ளநான் இந்த ஹதீஸை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கüடமிருந்து அபூ தமீமா பின் முஜாலித் (ரஹ்) அவர்கள் வாயிலாகக் கேட்டேனா? அல்லது நேரடியாக அபூஉஸ்மானிடமே கேட்டேனா? எனன இந்த ஹதீஸ் விஷயத்தில் எனக்குக் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இத்தனை முறை இதை அறிவித்துவிட்டோமே என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன். பின்னர் (எடுத்துப்) பார்த்தபோது அபூஉஸ்மானிடமிருந்து (நேரடியாக) நான் கேட்டவற்றில் இதுவும் பதிவுசெய்யப்பட்டிருந்ததைக் கண்டேன்.
 (பழைய உறவை) மதித்து நடப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
6004 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்கüன் மீது நான் ரோஷம்கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்கüன் துணைவியரில் வேறெவரின் மீதும் நான் ரோஷம்கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன்.
லிஎன்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்துகொள்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்.லி
மேலும், முத்துமாüகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்குக் கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும் படி நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந்தான். இன்னும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிதளவை கதீஜா (ரலி) அவர் கüன் தோழியரிடையே அன்பüப்பாகப் பங்கிட்டுவிடுவார்கள்.28
அநாதையை வளர்ப்பவரின் சிறப்பு
6005 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடைவெü விட்டு) சைகை செய்தார்கள்.29
கணவனை இழந்த கைம்பெண்களுக்காகப் பாடுபடுபவர்.
6006 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கணவனை இழந்த கைம்பெண்ணுக் காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது "இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்'.
இதை ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.30

                                               இன்ஷா அல்லாஹ் தொடரும் .....

No comments:

Post a Comment