Friday, 14 September 2012

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழலில் நிற்போம்


அல்லாஹ்வை நினைப்போம்  அர்ஷின் நிழலில் நிற்போம்

எம். ஷம்சுல்லுஹா

இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன.
நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன. இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 7:200, 201)

தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வின் திக்ர் மழையில் நமது நாவுகள் நனைய வேண்டும். தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.
"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்'' என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6806

பாதுகாப்புக் கேடயம்
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும். மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
நூல் : புகாரி 6403

அல்லாஹ்வை நினைத்தால் அவன் நம்மை நினைப்பான்
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 2:152)

நாம் நடந்து சென்றால் அல்லாஹ் ஓடி வருவான்
"என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
நூல் : புகாரி 7405
சுவனத்தின் புதையல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், "அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே இருக்கின்றான்'' என்று கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. "லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். "அப்துல்லாஹ் பின் கைஸே!'' என்று அழைத்தார்கள். "கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் பதிலளித்தேன். "உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று சொன்னார்கள். "சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நான் கூறினேன். "லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி).
நூல் : புகாரி 4202
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜும்தான் என்ற மலையைக் கடந்து சென்ற போது. "செல்லுங்கள்! இது தான் ஜும்தான் மலையாகும். முஃப்ரிதூன் முந்தி விட்டனர்'' என்று சொன்னார்கள். "முஃப்ரிதூன் என்றால் யார்?'' என்று நபித்தோழர்கள் வினவிய போது. "அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்கள், பெண்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 4834

சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும் திக்ர்
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1142

ஆயிரம் நன்மைகள்
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது. "உங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாமல் இருப்பாரா?'' என்று கேட்டார்கள். எங்களில் ஒருவர் எப்படி ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள். "ஒரு நாளைக்கு அவர் நூறு தஸ்பீஹ் செய்கின்ற போது அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதியப் படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் அழிக்கப் படுகின்றன'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் 4866

பாவத்திற்குப் பரிகாரம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, "சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)'' என்று சொல்பவர்களாக இருந்தனர். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?'' என்று கேட்ட போது, "அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி),
நூல் : அபூதாவூத் 4217

Sunday, 5 August 2012

ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்




ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்

பராஅத் இரவு, மிஃராஜ் இரவு என்று இல்லாத, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத இரவுகளை உயிர்ப்பிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உற்சாகம் காட்டி உணர்வூட்டும் உலமாக்கள், நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய, வற்புறுத்திய ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளை, அதில் அடங்கியுள்ள லைலத்துல் கத்ரை அடைவதற்கு ஆர்வம் ஊட்டுவதில்லை; ஆசை காட்டுவதில்லை.

ரமளான் 27ஆம் இரவு மட்டும் அமர்க்களமான, ஆர்ப்பாட்டமான அமல்களைச் செய்து விட்டு, அதுவும் நபி (ஸல்) அவர்கள் கற்றும் காட்டியும் தராத வகையில் அமல்களைச் செய்து விட்டு ரமளானின் பிந்திய 10 இரவுகளை இருட்டாக்கி விடுகின்றனர்; இல்லாமல் ஆக்கி விடுகின்றனர்.
இதற்குக் காரணம் 27ல் லைலத்துல் கத்ர் இருப்பதாக அவர்கள் குருட்டுத்தனமாக நம்புவது தான். அதனால் இதைத் தான் லைலத்துல் கத்ர் என்று துணிந்து பிரச்சாரமும் செய்கின்றனர். உப்புச் சப்பில்லாத, உருப்படாத ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர்.
லைலத்துல் கத்ர் என்ற வார்த்தையில் மொத்தம் 9 அரபி எழுத்துக்கள். இந்த வார்த்தை குர்ஆனில் மூன்று தடவை இடம்பெறுகின்றது. ஆக, ஒன்பதை மூன்றால் பெருக்கினால் 27 வருகின்றது. அதனால் லைலத்துல் கத்ர் 27ல் தான் உள்ளது என்ற கூறுகெட்ட வாதத்தைக் கூறுகின்றனர்.

இது ஓர் அபத்தமான வாதம் என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ் என்ற அரபி வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன என்பதற்காக நான்கு கடவுள்கள் என்று சொல்வது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு இது அபத்தமாகும். இந்த அபத்தங்கள் ஒருபோதும் ஆதாரமாகாது.

அடுத்து முஸ்லிமில் இடம்பெறும் ஒரு செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் "வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்' என்று கூறுகிறாரே?'' என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழிபாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக் கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்'' என்று பதிலளித்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்' என்று கூறாமல் "அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்' என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்' என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)'' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ்
நூல்: முஸ்லிம் 1272, 1999

"அடையாளத்தை வைத்து நான் அறிந்து கொள்வேன்'' என்று  கூறுவதன் மூலம் நபித்தோழர் தனது சொந்தக் கருத்தைத் தான் இங்கு கூறுகின்றார் என்பதை சாதாரணமாக விளங்கிக் கொள்ளலாம்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னால், அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் 21ஆம் இரவில் தான் லைலத்துல் கத்ர் என்று சொல்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் -அந்த இரவின் காலையின் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள் - "யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது என மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்!'' எனக் கூறினார்கள்.  அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 2027

இந்த நபித்தோழரும் 21ஆம் இரவில் லைலத்துல் கத்ர் என்று அதன் அடையாளத்தை வைத்துத் தான் கூறுகின்றார்.

27ல் தான் லைலத்துல் கத்ர் என்று கூறும் ஆலிம்கள் இந்தச் செய்தியையும் மக்களிடம் கூற வேண்டுமல்லவா? ஆனால் இதைக் கண்டு கொள்வதில்லை.
உண்மையில் லைலத்துல் கத்ர் என்பது 27ல் மட்டுமல்ல. பிந்திய 10 இரவுகளில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில் தான் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க இரவு) பற்றி ("அது ரமளான் மாதத்தில் எந்த இரவு' என்று) அறிவிப்பதற்காக (தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 49

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 2023

நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் "லைலத்துல் கத்ர்' எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள்.   
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2015

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் "லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1988

இந்த ஹதீஸ்களெல்லாம் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இருப்பதை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த ஆலிம்கள் தானும் கெட்டு, மக்களையும் வழிகெடுத்து, 27ஆம் இரவில் மட்டும் நிற்க வைத்து அன்றைய இரவுகளில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து, இது மட்டும் தான் லைலத்துல் கத்ர்; ஏனைய இரவுகளில் இல்லை என்றாக்கி விடுகின்றனர்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 16:25

இதன் மூலம் ஏமாந்த மக்கள் அனைவரின் பாவ மூட்டைகளையும் இவர்கள் சுமக்கத் துணிந்து விட்டனர். அல்லாஹ் காப்பானாக!

எனவே, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை 27ஆம் இரவில் மட்டும் தேடாமல் பிந்திய பத்து இரவுகளிலும் தேடுவோம்; லைலத்துல் கத்ரை அடைவோம்.
இதன் மூலம் நமக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றனர்.

1. லைலத்துல் கத்ர் அன்று மட்டும் அல்லாமல் மீதி 9 அல்லது 8 நாட்கள் செய்த வணக்கத்தின் நன்மைகள்.
2. லைலத்துல் கதர் இரவின் நன்மைகளும் நிச்சயமாகக் கிடைத்து விடுகின்றது.
பொதுவாக வியாபாரிகளுக்கு இந்த இரவுகளில் தான் கொள்ளை வியாபாரம் நடக்கும். வியாபாரமும் செய்து கொள்ள வேண்டியது தான். ஆனால் லைலத்துல் கத்ரை இழந்து விடக் கூடாது.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
அல்குர்ஆன் 7:163

இஸ்ரவேலர்களின் புனித நாளான சனிக்கிழமை அன்று சோதித்தது போன்று இறைவன் நம்மைச் சோதிப்பான்.

நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?'' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 5:94

ஹஜ் வணக்கத்தின் போது வேட்டையாடத் தடை செய்யப்பட்ட நேரத்தில் வேட்டைப் பிராணிகள் நமக்கு முன்னால் வந்து வந்து போகுமாறு சோதிக்கின்றான்.
இதுபோன்றே லைலத்துல் கத்ரைத் தேடும் பிந்திய பத்து இரவுகளிலும் வியாபாரம் செழிப்பாக நடக்கும். இந்தச் சோதனைகளுக்கு நாம் பலியாகி விடாமல் லைலத்துல் கத்ரை அடைவோம். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம்.

ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தைக் கடைப்பிடித்ததிலிருந்து இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
வரும் ஆண்டு இருப்போமா என்று சொல்ல முடியாது. எனவே இந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் லைலத்துல் கத்ரை அடைவோம், இன்ஷா அல்லாஹ்.

Thursday, 2 August 2012

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?


பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமானதா?
பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒரு அறிஞர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.
பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும் என்று ஸஹீஹ் முஸ்லிம் நூலில் பின் வரும் ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
صحيح مسلم - (ج 2 / ص 4)
875 -حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்பவரின் தொழுகை அழைப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத்சொல்லுங்கள். ஏனெனில்,என் மீது யார் ஒரு முறை ஸலவாத்சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலாஎன்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்;அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே,எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்577
இந்த ஹதீஸ் திர்மிதீ,அபூதாவூத்,நஸயீ,அஹ்மத் ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்களில் நீங்கள் குறிப்பிடுவது போல் அனைத்து நூல்களிலும் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளர் தான் இடம் பெறுகிறார்.
இவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. இவரைப் பற்றி எந்த ஹதீஸ் கலை அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இப்னு ஹிப்பான் மட்டுமே இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். எனவே இது ஏற்கப்படாது என்பது நீங்கள் குறிப்பிடும் அறிஞரின் வாதம்.
ஒருவரை இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கக் கூடாது என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இது பற்றி ஜகாத் என்ற நூலில் நாமே பின் வருமாறு தெளிவுபடுத்தியுள்ளோம்.
அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.
இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை ஒருவரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.
எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று அறியப்படாதவராகவும் இருக்கலாம்.
இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்என்று கூறுவார். இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்என்பதே இதன் பொருளாகும்.
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி,இப்னு ஹிப்பானும்,தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை
இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.
இதே அடிப்படையில் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளரைப் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும்,இவர் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்என்று தஹபீ கூறியுள்ளதாலும்,இதைத் தவிர வேறு யாரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாததாலும்,பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லும் ஹதீஸ் பலவீனமானது என்று கூற வேண்டியது தானே என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
கஅப் பின் அல்கமா குறித்து இப்னு ஹிப்பான்,தஹபீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று சான்றளித்திருந்து,வேறு யாரும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று அறியப்படாதவர் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
ஆனால் கஅப் பின் அல்கமா அவர்கள் யாரென அறியப்படாதவர் அல்ல. மாறாக அவர் அறியப்பட்டவர் தான். ஹதீஸ் கலையின் சரியான விதியை அறியாததால் சிலர் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஒரு அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று ஒரு அறிஞரோ பல அறிஞரோ கூறினால் அவர் அறியப்படாதவர் என்ற முடிவுக்கு உடனே வரக் கூடாது. மற்ற அறிஞர்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்று நாம் தேடிப் பார்க்க வேண்டும். தகுதி மிக்க அறிஞர்கள் அவரைப் பற்றி அறிந்துள்ளார்கள் என்ற ஆதாரம் கிடைத்தால் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனத்தைத் தள்ளிவிட வேண்டும். ஒரு நபரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாததால் அனைவருக்கும் அவரைப் பற்றித் தெரியாது என்று கூற முடியாது.
இவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும்; இவர் நம்பகமானவர்; நல்லவர்; ஏற்கத்தக்கவர் என்று வேறு சில அறிஞர்கள் கூறினால் அவர் அறியப்பட்டவராகி விடுவார். இதைப் பரவலாக அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.
ஒருவரைப் பற்றி நேரடியாக இவ்வாறு கூறாமல் மறைமுகமாகவும் கூறப்படுவதுண்டு. இரண்டுமே சமமானவை தான். ஆனால் மறைமுகமாக இவ்வாறு கூறுவது பற்றி அதிகமானோர் அறிந்து வைத்திருக்கவில்லை.
மறைமுகமாக நற்சான்று அளிப்பது என்றால் என்ன? இது இரு வகையில் அமையும்.
1- ஒரு அறிவிப்பாளர் பற்றி யாரென அறியப்படாதவர் என்று சில அறிஞர்கள் கூறி இருக்கும் போது நம்பகமான இரண்டு அறிவிப்பாளர்கள் அவர் வழியாக ஹதீஸ்களை அறிவித்தால் அவரை அந்த இரண்டு பேரும் அறிந்திருக்கிறார்கள் என்பது பொருள். யாரென அறியப்படாதவர் என்ற குறை இதனால் நீங்கி விடும்.
2- ஹதீஸ்களைப் பதிவு செய்யும் அறிஞர்கள் இரண்டு வகையினராக உள்ளனர். தமது ஆசிரியர் வழியாகக் கிடைக்கும் அனைத்தையும் பதிவு செய்பவர்கள் அவர்களில் முதல் வகையினராவர். இவர்கள் த்மது ஆசிரியர் எத்தனை அறிவிப்பாளர்கள் பெயரைக் கூறி அவர்கள் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களின் வரலாறையோ நம்பகத்தன்மையையோ ஆராயாமல் அப்படியே பதிவு செய்து விடுவார்கள்.
தமது ஆசிரியர் கூறும் எந்த அறிவிப்பாக இருந்தாலும் அதில் இடம் பெறும் ஒவ்வொரு அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையையும் உறுதி செய்யாமல் பதிவு செய்வதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டு பதிவு செய்வோர் இரண்டாம் வகையினர். அறிவிப்பாளர்களில் யாரெனத் தெரியாதவர்கள் அல்லது பலவீனமானவர்கள் இடம் பெற்றால் அந்த ஹதீஸைத் தமது நூலில் இவர்கள் பதிவு செய்ய மாட்டார்கள். புகாரி, முஸ்லிம் ஆகியோர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
யாரென அறியப்படாதவர் என்று விமர்சிக்கப்பட்ட ஒருவரின் ஹதீஸை இந்த அறிஞர்கள் தமது நூலில் பதிவு செய்திருந்தால் அந்த அறிவிப்பாளரை இவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது பொருள்.
இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
قواعد التحديث من فنون مصطلح الحديث - (ج 1 / ص 155)
-الناقلون المجهولون 



قال الخطيب البغدادي ((المجهول عند أهل الحديث هل كل من لم يشتهر بطلب العلم في نفسه ولا عرفه العلماء ومن لم يعرف حديثه إلا من جهة راو واحد وأقل ما يرتفع به الجهالة أن يروي عنه اثنان فصاعدا من المشهورين بالعلم إلا أنه لا يثبت له حكم العدالة بروايتهما عنه)) وقال الدار قطني ((تثبت العدالة برواية  
تدريب الراوي في شرح تقريب النواوي - السيوطي - (ج 1 / ص 317)



(ثم من روى عنه عدلان عيناه ارتفعت جهالة عينه قال الخطيب ) في الكفاية وغيرها ( المجهول عند أهل الحديث من لم تعرفه العلماء ) ولم يشتهر بطلب العلم في نفسه ( ولا يعرف حديثه إلا من جهة ) راو ( واحد وأقل ما يرفع الجهالة ) عنه ( رواية اثنين مشهورين ) فأكثر
ஹதீஸ்கலையில் அறியப்படாதவர் யாரென்றால் யார் கல்வியைத் தேடுபவர் என்று பிரபலமாகவில்லையோ அறிஞர்களும் யாரை அறிந்திருக்கவில்லையோ, ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அவர் வழியாக அறிவிக்கிறாரோ அவர் தான். யாரென அறியப்படாதவர் என்ற குறையை நீக்கும் குறைந்த பட்ச அளவு பிரபலமான இருவர் அவர் வழியாக அறிவிப்பதாகும். ஆனால் இதனால் அவரது நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாது என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது யாரென அறியப்படாதவர் என்ற குறை மட்டும் தான் இதனால் நீங்கும். அவரது நம்பகத் தன்மையை தனியாக நிரூபிக்க வேண்டும்.
المقنع - ابن الملقن - (ج 1 / ص 258)
وثالثهما مجهول العين



قال الخطيب والمجهول عند المحدثين من لم يعرفه العلماء ولا عرف حديثه إلا من جهة راو واحد مثل عمرو ذي مر وجبار الطائي وسعيد بن ذي حدان لم يرو عنهم غير أبي إسحاق السبيعي ومثل الهزهاز بن ميزن لا يروي عنه غير الشعبي ومثل جري بن كليب لم يرو عنه إلا قتادة
யாரைப் பற்றி உலமாகக்கள் அறிந்திருக்கவில்லையோ, ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டும் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர் தான் யாரென அறியப்படாதவர். உதாரணமாக அம்ரு தீ மிர், ஜப்பார் தாயீ, சயீத் பின் தீ ஹதான் இவர்கள் மூவர் வழியாக அபூ இஸ்ஹாக் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். ஹஸ்ஹாஸ் பின் மீஸன் என்பவர் வழியாக ஷஅபி மட்டுமே அறிவிக்கிறார். ஜரீ பின் குலைப் வழியாக கதாதா மட்டுமே அறிவிக்கிறார். எனவே இவர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்று கதீப் கூறுகிறார்.
இது முதல் வகைக்குரிய ஆதாரமாகும்.
மேற்கண்ட கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளர் வழியாக ஒரே ஒரு நம்பகமான அறிவிப்பாளர் மட்டும் அறிவித்திருந்தால் தான் யாரென அறியப்படாதவர் என்ற வட்டத்தில் அவர் அடங்குவார். ஆனால் கஅப் பின் அல்கமாவழியாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஒருவர் மட்டும் அறிவிக்கவில்லை. பல அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
تهذيب الكمال للمزي - (ج 24 / ص 183)
4976 -بخ م د ت س: كعب (3) بن علقمة بن كعب بن عدي التنوخي، أبو عبد الحميد المصري، وجده كعب بن عدي معدود في الصحابة. رأى عبدالله بن الحارث بن جزء الزبيدي. روى عن: بلال بن عبدالله بن عمر (م)، ودخين الحجري، وسالم أبي النضر (س)، وسعد بن مسعود الصدفي، وسعيد بن المسيب، وعبد الله بن زرير الغافقي، وأبي تميم عبدالله بن مالك الجيشاني، وعبد الرحمان بن جبير المصري (م د ت س)، وعبد الرحمان بن شماسة (م دس)، وعبد العزيز بن مروان بن الحكم، وعياض بن عبدالله بن سعد بن أبي سرح، وعيسى بن هلال الصدفي (قد)، وغرفة بن الحارث الكندي، وكثير أبي الهيثم (بخ د س) مولى عقبة بن عامر الجهني، وأبي الخير مرثد بن عبدالله اليزني (د ت)، وناعم مولى أم سلمة، وأبي عبد الرحمان الفهري.
روى عنه:إبراهيم بن نشيط الوعلاني(بخ دس)،وبكير بن عبدالله الاشج،وحرملة بن عمران التجيبي، وحيوة بن شريح(م د ت س)،وسعيد بن أبي أيوب(م د)،وأبو السحماء سهيل بن حسن الكلبي،وعبد الله بن سليمان الطويل،وعبد الله بن لهيعة(د)،وعمروبن الحارث(م س)،والليث بن سعد،ومحمد بن يزيد بن أبي زياد(دت)مولى المغيرة بن شعبة،ويحيى بن أيوب(د).
ذكره ابن حبان في كتاب الثقات (1) . وقال أبو سعيد بن يونس: توفي سنة سبع وعشرين ومئة فيما يقال. وقال يحيى بن بكير: مات سنة ثلاثين ومئة (2). روى له البخاري في الادب ، والباقون سوى ابن ماجة.
கஅப் பின் அல்கமா வழியாக
1.இப்ராஹீம் பின் நஷீத் அல்வஃலானீ
2.புகைர் பின் அப்துல்லாஹ் அல் அஷஜ்
3.ஹர்மலா பின் இம்ரான் அத்தஜீபீ
4.ஹைவா பின் ஷுரைஹ்
5.ஸயீத் பின் அபீ அய்யூப்
6.அபுஸ் ஸஹ்மா எனும் ஸுஹைல் பின் ஹஸன்
7.அப்துல்லாஹ் பின் சுலைமான் அத்தவீல்
8.அப்துல்லாஹ் பின் லஹீஆ
9.அம்ரு பின் அல் ஹாரிஸ்
10.லைஸ் பின் சஅத்
11.முஹம்மத் பின் யஸீத் பின் அபீ ஸியாத்
12.யஹ்யா பின் அய்யூப்
ஆகிய பன்னிரண்டு பேர் அவரை அறிந்திருப்பதால் தான் அவர் கூறியதாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இந்தப் பன்னிரண்டு பேரில் அடிக்கோடிட்ட ஆறு நபர்கள் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்கள். பெரிய அறிஞர்கள். நம்பகமான ஆறு பேர் கஅப் பின் அல்கமா அவர்களிடம் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். எனவே அவர் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனம் முற்றிலும் தவறாகும்.
மறைமுகமான நற்சான்றில் இன்னொரு வகைக்குரிய ஆதாரத்தைக் காண்போம்.
منهج الإمام البخاري - (ج 1 / ص 73)
محمد بن الحسن المروزي
من شيوخ البخاري لم يعرفه أبو حاتم فقال : إنه مجهول. قال الحافظ : قد عرفه البخاري وروى عنه في صحيحه في موضعين. وعرفه ابن حبان فذكره في الطبقة الرابعة من الثقات (276).
புஹாரியின் ஆசிரியரான முஹம்மத் பின் அல்ஹஸன் அல்மரூஸி அவர்கள் யாரென அறியப்படாதவர் என்று அபூ ஹாத்தம் கூறுகிறார். ஆனால் அவரை புஹாரி இமாம் அறிந்து இரண்டு இரண்டு இடங்களில் அவரது ஹதீஸைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்

تلخيص الحبير - ابن حجر - (ج 3 / ص 5)



وزعم عبد الحق أن عبد الله بن عصمة ضعيف جدا ولم يتعقبه بن القطان بل نقل عن بن حزم أنه قال هو مجهول وهو جرح مردود فقد روى عنه ثلاثة واحتج به النسائي
அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று கூறுகிறார். அது நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் வழியாக மூன்று பேர் அறிவித்துள்ளனர். மேலும் நஸயீ அவர்கள் இவர் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.
تلخيص الحبير - ابن حجر - (ج 4 / ص 137)



وأعله بن الجوزي بمعقل بن عبيد الله فزعم أنه مجهول فأخطأ بل هو ثقة من رجال مسلم
மஃகில் பின் உபைதில்லாஹ் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுகிறார். அவர் தவறாகக் கூறிவிட்டார். இவர் முஸ்லிம் நூலின் அறிவிப்பாளரும் நம்பகமானவருமாவார் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்
تهذيب التهذيب - ابن حجر - (ج 1 / ص 76)



152 -س النسائي أحمد بن نفيل السكوني الكوفي روى عن حفص بن غياث وعنه النسائي وقال لا بأس به قال المزي ذكره أبن عساكر ولم أقف على روايته عنه وقال الذهبي مجهول قلت بل هو معروف يكفيه رواية النسائي عنه
அஹ்மத் பின் நுஃபைல் யாரென அறியப்படாதவர் என்று தஹபீ கூறுகிறார். இல்லை அவர் நம்பக்மானவர் தான். அவர் வழியாக நஸயீ அறிவித்திருப்பதே போதுமானதாகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.
எனவே நம்பகமான ஆறு அறிவிப்பாளர்கள் இவர் வழியாக அறிவித்திருப்பதால கஅப் பின் அல்கமா யாரென அறியப்பட்டவர் என்பது உறுதியாகிறது. இமாம் முஸ்லிம் அவர்கள் நம்பகமானவர் என்பதை உறுதி செய்யாமல் எவரது ஹதீஸையும் தனது முஸ்லிம் என்ற நூலில் பதிவு செய்யமாட்டார் என்பதாலும், கஅப் பின் அல்கமாவின் நம்பகத் தன்மைக்கு எதிராக ஒருவரும் கருத்து கூறாததாலும் இவர் நம்பகமானவர் என்பதும் உறுதியாகிறது.
ثمرات النظر في علم الأثر الصنعاني - (ج 1 / ص 120)
وبه يعلم أن قول الحافظ ابن حجر إن شرط الصحيح أن يكون رواية معروفا بالعدالة فمن زعم أن أحدا منهم أي ممن في الصحيحين مجهول العدالة فكأنه نازع المصنف أيضا في دعواه أنه معروف ولا شك أن المدعي لمعرفته مقدم على من يدعي عدم معرفته لما مع المثبت من زيادة العلم انتهى
هذا مسلم في هذا النوع لكن كيف يتم فيمن عرف بعدم العدالة كعمران بن حطان من رجال البخاري ومروان من رجالهما لما عرفت من اعتماد مالك على مروان واعتماد الشيخين على مالك


புஹாரி மற்றும் முஸ்லிம் அறிவிப்பாளர்களில் நேர்மை நிரூபிக்கப்படாத அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்று யாரேனும் வாதிட்டால் எங்கள் நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து அறிவிப்பாளர்கள் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் கூறுவதை மறுத்தவராகிறார். தெரியும் என்று சம்மந்தப்பட்டவர்கள் கூறுவது தான் ஏற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என ஹாஃபிள் இப்னு ஹஜர் கூறுகிறார்.
تقريب التهذيب : ابن حجر - (ج 2 / ص 461)
5644-كعب ابن علقمة ابن كعب المصري التنوخي أبو عبد الحميد صدوق من الخامسة مات سنة سبع وعشرين وقيل بعدها بخ م د ت س
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இவரைப் பற்றி உண்மையாளர் என்று கூறுகிறார்.
புகாரி,முஸ்லிம் ஆகிய இமாம்களைப் பொறுத்த வரை,ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸைத் தமது நூற்களில் இடம் பெறச் செய்வதாக இருந்தால் அந்த அறிவிப்பாளர் அறியப்பட்டவராக இருந்து,அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பதிவு செய்வார்கள்.


கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார் என்றால் அவர் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.
புகாரி,முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் குறித்து,மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாகக் குறை கூறினால் மட்டுமே அந்த அறிவிப்பாளர் பலவீனமானவராகக் கருதப்படுவார். அவ்வாறின்றி,அந்த அறிவிப்பாளர் குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை என்றால் அந்த அறிவிப்பாளர் யாரென்று அறியப்பட்டவராகவும் நம்பகமானவராகவுமே கருதப்படுவார். இது ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விதியாகும்.
கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளதால் கஅப் பின் அல்கமா நம்பகமானவர் என்பதை முஸ்லிம் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் கஅப் பின் அல்கமாவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்ற வாதம் தவறாகும்.
கஅப் பின் அல்கமா குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறாததால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே அவர் அறிவிக்கும் பாங்குக்குப் பின் ஸலவாத் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.